அவுஸ்திரேலிய காவல்துறையினால் 15 வயதுடைய மாணவன் கைது

வியாழன் டிசம்பர் 10, 2015

அரச கட்டிடங்களை தாக்கி அழிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிட்னி காவல்துறை குழு ஒன்றை இன்று கைது செய்தது. இக்குழுவில் 15 வயதே நிரம்பிய மாணவன் ஒருவனும் அடங்குகிறான். இவர்களின் தாக்குதல் திட்டத்தில், அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை தலைமையகக் கட்ட்டமும் உள்ளடக்கப் பட்டிருந்ததாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எழுந்தமானமாக பொதுமக்களை கொல்லவும் இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

காவல்துறையினருக்கு எதிரான பல தாக்குதல்கள் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வருவதன் தொடர்ச்சியாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் சிட்னியின் மேற்குப் பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சூட்டுக்கு இலக்காகினார். காவல்துறை கட்டத்திற்கு வெளியே இச்சம்பவம் இடம்பெற்றது. தாக்குதலை மேற்கொண்ட 15 வயதுடைய காளீ மொகம்மட் என்ற நபர் இச்சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்ட்டார்.

குறித்த இந்தச் சதித் திட்டத்தை ஐ.எஸ் போன்ற அமைப்பு எதுவும் திட்டமிடவில்லை என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். கடந்த ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் சதித் திட்டங்களை முன்னெடுத்த தீவிர இஸ்லாமிய போக்குடைய இளைஞர்களே இதையும் திட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.