இத்தாலிய பாரம்பரிய கடல் உணவில் ஊதா முத்து

சனி பெப்ரவரி 27, 2016

பரிமாறப்பட்ட உணவினை உண்டபோது, கடினமான பொருள் கடிபடுவதை உணர்ந்த லின்ட்சே, அதனைக் கையில் எடுத்துப் பார்த்துள்ளார்.அது முத்து என சந்தேகித்த அவர், அதனை பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதன்போது, மிக விலையுயர்ந்த, அரிதான Quahog எனப்படும் ஊதா நிற முத்து அது என கண்டறியப்பட்டது.தற்போதைய சந்தை நிலவரப்படி அதன் மதிப்பு 87,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி பரவியதிலிருந்து, தமது ஹோட்டலுக்கு மக்கள் அதிகளவில் வருவதாகவும் பெரும்பாலானோர் லின்ட்சே ஆர்டர் செய்த Frutti di mare உணவினையே ஆர்டர் செய்வதாகவும் குறித்த ஹோட்டலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.