உரத்திற்கு தட்டுப்பாடு மரக்கறி செய்கையாளர்கள் பெரிதும் பாதிப்பு

சனி சனவரி 09, 2016

நாடு முழுவதும் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை கமலநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக மரக்கறி செய்கையாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருசில இடங்களில் உரமூடை 4,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கமநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விவசாய அமைச்சின் செயலாளர் பி. விஜேரத்னவிடம் வினவியபோது, ஒருசில வியாபாரிகள் அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்வது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

பழைய விலையிலேயே விற்பனை செய்யுமாறு கமநல சேவைகள் நிலையங்களுக்கு சுற்ற்றிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.