உலகம் வியக்கும் விடுதலைப்புலிகளின் இராணுவ மரியாதை!

திங்கள் ஓகஸ்ட் 31, 2015

உலகின் பெரும்பாலான இராணுவக் கட்டமைப்பில் இராணுவ மரியாதை (Salute) என்பது யாவரும் அறிந்த ஒன்றாகத்தான்...இருக்கின்றது. இன்று பிறந்த குழந்தையும் செய்கின்றனர். ஆனால் சில நாடுகளின் இராணுவம் தமக்கு என்று தனிமையான சிறப்புடன் உருவாக்கி நின்றதையும் சில தேசத்து வரலாறுகள் கூறி நிற்கின்றன.

அவ்வகையில் எம் தமிழீழத்தின் மீட்பர்கள், பாதுகாவலர்களான தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ மரியாதையை சற்று வித்தியாசம் தான். போராட்டம் ஆரம்ப காலத்தில் உலக இராணுவங்கள் கடைப்பிடிக்கும் சாயலே கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஆதாரங்களை ஆரம்ப காலத்தில் தேசியத்தலைவர் தமிழீழ காவற்துறை ஆரம்பித்த நிகழ்வில் அணிவகுப்பின் மரியாதையை ஏற்கும் புகைப்படங்கள் கூறிநிற்கின்றன.

 

ஆயினும் நாளடைவில் போராட்டம் உச்சம் பெற்று பரிமாண வளர்ச்சி பெற்ற வேளை தமிழன் தனிச் சிறப்புடன் இந்த வையகம் எங்கும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணச் சிந்தினை கொண்ட எம் தேசியத் தலைவர் சற்று இராணுவ மரியாதையையும். தமிழர் பண்பாட்டுடன் ஒன்றிப்போகும் சாயலில் உருவாக்கினார்.

 

தமிழரின் பண்பாட்டில் வணக்கம் கூறும்போது இருகை கூப்பி தலையை தாழ்த்தி வணக்கம் கூருகின்றோம். அதையே சற்று இராணுவ முறைப்படி ஒரு கையை நெஞ்சினில் வைத்தும் மறு கை நேராக அதன் பேரு விரல் நிகத்தின்பகுதி தரையை பார்த்த வண்ணம் உடல் நேராக நிமிர்வுடன் இருத்தல் வேண்டும்.

 

இன்றளவும் தமிழரின் இராணுவக் கட்டமைப்பில் தமிழரின் பண்பாட்டுக்கு அமைவாக யாவற்றையும் தேசியத்தலைவர் வகுத்ததினால் எம்மினத்தின் வரலாற்றை உலகே இன்றும் வியந்து பார்க்கிறது.