ஒக்ரோபர் 19 – படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூருவோம்

திங்கள் அக்டோபர் 19, 2015

தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட ஒக்ரோபர் 19ஆம் நாள், சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் படுகொலை செய்யப்பட்ட எல்லா ஊடகவியலாளர்களையும் நினைவு கூரும் நாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

 

வடக்கில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் நிமலராஜன்.தமிழர்களின­் உரிமைப் போராட்டத்துக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.அவர்கள் அடக்குமுறைகளைத் தாங்கிக் கொண்டு, தமது கடமைகளுக்காக செய்த தியாகம் அளவிடமுடியாதது.

 

2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் நாள் தொடக்கம், 2009 மே 19ஆம் நாள் வரையான எட்டு ஆண்டுகள், ஆறு மாதங்களில், தமது பேனாவினால் தமிழ்மக்களுக்காக போராடிய, 43 தமிழ் ஊடகவியலாளர்களை இழந்திருக்கிறோம். இது தமிழ்ச் சமூகம் கொடுத்த மிகப் பெரிய விலை.

 

பெரும்பாலான ஊடகவியலாளர்களின் படுகொலையை தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஒரு அங்கமாகவே எடுத்துக் கொள்ள முடியும்.பெரும்பாலான இந்தப் படுகொலைகள் நிழல் போர் நடந்த காலத்திலேயே இடம்பெற்றுள்ளன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளத­ு.