ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம்

புதன் பெப்ரவரி 24, 2016

சர்வதேச கிரிக்கட்டிலிருந்த ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என நியூஸிலாந்து அணித்தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது  போட்டியில், அதிரடியாக செயற்பட்ட மெக்கலம் அதிவிரைவாக டெஸ்ட் சதம் அடித்த வீரர் மற்றும் டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இப்போட்டியில் மெக்கலம் சாதனை படைத்த போதிலும் அவுஸ்திரேலிய அணியே தொடரை வென்றது.

அவுஸ்திரேலிய அணியுடனான இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற மெக்கலம், டெஸ்ட் தொடரை இழந்தது ஏமாற்றம் அளிக்கின்றது எனினும் சரியான அணி வெற்றிபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். அத்துடன், இது மறக்க முடியாத பயணம் எனவும்  ஓய்வு பெறுவதற்கு இது சிறந்த தருணம் எனவும் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணித்தலைவரான மெக்கலம் தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்க்கையை 6453 ஒட்டங்களுடன் நிறைவு செய்துள்ளார். இந்த ஓட்ட எண்ணிக்கையினுள் 12 சதம் மற்றும் 31 அரைச்சதங்கள் உள்ளடங்கும்.

தனது துடுப்பாட்ட திறனால் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மெக்கலம் டெஸ்ட் போட்டி ஒன்றில் மூன்று சதங்களை பெற்ற நியூஸிலாந்தின் ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.