சவுதியில் தற்கொலை குண்டுத்து தாக்குதல் 13 பேர் பலி

வெள்ளி ஓகஸ்ட் 07, 2015

சவுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்து தாக்குதலில் குறைந்த பட்சம் 13 பேர் கொல்லப்பட்டனர்.  சவுதியின் அபா நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த பள்ளிவாசலை பெரும்பாலும் பாதுகாப்புத் தரப்பினரே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.  இந்த பகுதி யெமன் எல்லைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், சியா ஹோத்தி தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 

ஏற்கனவே கடந்த மே மாதமும் சவுதியில் இரண்டு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.