சிரியாவில் மனித தசையை உண்ணும் மர்ம பூச்சி! அதிர்ச்சித் தகவல்

ஞாயிறு டிசம்பர் 06, 2015

சிரியா முழுவதும் மனித தசையை உண்ணும் பூச்சி வகையொன்று பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 
இந்த அனர்த்தத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகளே பொறுப்பு எனவும் அந்நாட்டிலுள்ள குர்திஷ் செம்பிறைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 மாத காலப் பகுதியில் சிரியாவில் மேற்படி தசை உண்ணும் “லெஷ்மானியா” பூச்சியால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 
 
ஐ.எஸ். தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களை கொன்று அவர்களது சடலங்களை வீதியில் கைவிட்டு சென்றமையே மேற்படி பூச்சியால் ஏற்படும் லெஷ்மானியாஸிஸ் நோய் பரவியமைக்கு காரணம் என குர்திஷ் செம்பிறைச் சங்கத்தைச் சேர்ந்த தில்காஷ் இஸா தெரிவித்துள்ளார். 
 
வீதியில் கைவிடப்பட்டிருந்த அழுகிய சடலங்கள் மூலமாகவே அந்த பூச்சி உருவாகி பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.