சென்னை – சிங்கப்பூர் விமானங்கள் ரத்து

வெள்ளி டிசம்பர் 04, 2015

தொடர் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் எதிரொலியாக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் 18 விமானச் சேவைகளும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு செல்லும் 16 விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ‘ஸ்டிரைய்ட் டைம்ஸ்’ நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.

அவசியத் தேவைக்காக அன்றி, சென்னைக்கு செல்வதை தவிர்க்குமாறும், சென்னையில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டினர் அதிகமாக வெளியில் செல்லாமல், பாதுகாப்பாக தங்கியிருக்குமாறும், எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நேற்றும், சென்னை – சிங்கப்பூர் இடையிலான 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.