தண்ணீரையும் காபன் டை ஒக்சைட்டையும் சேர்த்து எரிபொருள்

வெள்ளி பெப்ரவரி 26, 2016

நாம் அன்றாடம் பாவிக்கும் நீரினையும் சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் காபன் டை ஒக்சைட்டையும் பயன்படுத்தி திரவ ஹைட்ரோ காபன் என்ற எரிபொருள் தயாரிக்கமுடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை உற்பத்தி செய்வதற்கு அடர்த்தியான ஒளி, வெப்பம் மற்றும் அதிக அழுத்தம் ஆகியவை மட்டுமே தேவையாகவுள்ளன என்பதுதான் பெரிய விசயம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முறை மூலம், புவி வெப்பமயமாதலுக்கு காரணமான, மிதமிஞ்சிய கார்பன் – டை ஆக்சைடை மட்டுப்படுத்தவும், அதே சமயம் பயனுள்ள எரிபொருளை தயாரிக்கவும் முடியும்.

அத்துடன் ஹைட்ரோ காபன் எரிபொருளை உற்பத்தி செய்யும்போது இதன் பக்கவிளைவாக சுத்தமான ஒட்சிசன் உருவாகி காற்றில் கலக்கும் என்பதும் சூற்றுச்சூழல் ஆய்வாளர்களை வியப்பிலாழ்த்தியுள்ளது.

மேலும், பற்றி, வாயுசார்ந்த எரிபொருள்களுக்கு புதிய விநியோக முறையை உருவாக்க வேண்டுமெனவும் ஆனால் நாங்கள் முன்வைக்கும் திரவ ஹைட்ரோ கார்பன் எரிபொருளுக்கு, தற்போது உள்ள வினியோக முறையே போதும் என்பது, கூடுதல் சாதகம் என்கிறார், இந்த கண்டுபிடிப்பை செய்த, ஆய்வுக் குழு பேராசிரியர் பிரடெரிக் மக்டோனல்.

இக்கண்டுபிடிப்பில், காபன் டை ஒக்சைட்டும் நீரும் சேர்ந்து திரவ ஹைட்ரோ காபனும் ஒட்சிசனும் உருவாகின்றது. ஒளி, வெப்பம் மற்றும் வேதியியல் கொண்ட இந்த முறைக்கு போட்டோ தேமோ கெமிக்கல் எனப் பெயர்வைத்துள்ளனர்.