தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது புண்ணிகாரியமில்லை-கஜேந்திரகுமார்

வெள்ளி சனவரி 08, 2016

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதை புண்ணிகாரியம் போன்று எடுத்துக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமை.அதனை செய்வதற்கு தமிழ் தரப்பினர் அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர, காணி விடுவிக்கப்பட்டமைக்கு அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவிப்பதும், இதனை புண்ணிகாரியம் போல பார்ப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.