திருகோவிலில் ஆயுதங்கள் மீட்பு

வெள்ளி சனவரி 08, 2016

திருகோவில் பொது மயானத்தில், புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை மீட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.

மிதிவெடிகள் இரண்டு, கைக்குண்டுகள் இரண்டு, மோட்டார் குண்டுகள் இரண்டு, டொம்பா குண்டு, ரி-56 ரவைகள்-25, ரி-56 மெகஷின் இரண்டு மற்றும் எஸ்.எல்.ஆர் மெகஷின் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.