திருக்கோவில் மயானத்தில் வெடிபொருட்கள் மீட்பு

சனி சனவரி 09, 2016

அம்பாறை - திருக்கோவில் மயானத்தில் நேற்று (8) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து திருக்கோவில் மயானப் பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இரு கைக்குண்டுகள், இரு மோட்டார் குண்டுகள், இரு மிதிவெடிகள், மூன்று மகசீன் மற்றும் இருபத்தைந்து துப்பாக்கி ரவைகள் என்பனவே மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் இந்த ஆயுதங்கள் அவர்களினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் பாதுகாப்பாக கொண்டுச் செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.