திரு. பற்றிக் பிறவுன் ஆதரவை திரு.றோஷான் நல்லரட்ணத்திற்கு வழங்கியுள்ளார்

புதன் அக்டோபர் 14, 2015

ஒன்ராரியோ மாகாணத்தன் முற்போக்கு கொன்சவ்வேட்டிவ் கட்சியின் தலைவர் திரு. பற்றிக் பிறவுன் அவர்கள் ,தனது ஏகோபித்த ஆதரவை ஸ்காபறோ தென்மேற்குத் தொகுதியில் போட்டியிடும் திரு.றோஷான் நல்லரட்ணத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 


 கனடிய தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவால் தெரிவு செய்யப்பட்ட ஒன்ராரியோ மாகாணத்தன் முற்போக்கு கொன்சவ்வேட்டிவ் கட்சியின் தலைவர் திரு. பற்றிக் பிறவுன் அவர்கள் ,தனது ஆதரவை ஸ்காபறோ தென்மேற்குத் தொகுதியில் போட்டியிடும் திரு.றோஷான் நல்லரட்ணத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். றோஷன் அவர்களை எனக்கு பல வருடங்களாகத் தெரியும்.

 

தமிழ் மக்களின் பலமான குரலாக மட்டுமல்லாமல் , ஒரு போலிஸ் உத்தியோகத்தராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் சிறந்த தலைத்துவப் பண்போடும் திறமையாக பணி செய்து வருகிறார் . திரு.றோஷான் நல்லரட்ணம் அவர்கள் ஸ்காபறோ தென்மேற்குத் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மிகச் சிறந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.

 


இறுதியாக வெளி வந்த தேர்தல் கருத்துக் கணிப்பின் படி ஸ்காபறோ தென்மேற்குத் தொகுதியில் மும்முனைப்போட்டி நடைபெறுவதாகவும் எந்த வேட்பாளர் வெல்லுவார் என இறுதி நாள் வரை எதிர்வு கூற முடியாத நிலை இருப்பதாக கனேடிய மத்திய ஊடகங்கள் தெரிவிககின்றன . ஸ்காபறோ தென்மேற்குத் தொகுதியில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் அத் தொகுதியில் ஆளும்கட்சியில் போட்டியிடும் தமிழ் இளைஞரான றோஷான் நல்லரட்ணத்துக்கு வாக்குக்களை அளிப்பதன் மூலம் தமிழ் பிரதிநித்துவத்தை கனேடிய நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.