தெற்கு இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சனி டிசம்பர் 05, 2015

அவுஸ்திரேலியா அருகே தெற்கு இந்தியப் பெருங்கடலில் 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் நிபுணர்கள் விடுத்துள்ள அறிக்கையில், தெற்கு இந்தியப் பெருங்கடலில் இன்று காலை 6.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து சுமார் 3100 கி.மீ தொலைவிலும் ஹியர்டு தீவுக்கு 1000 கி.மீ தொலைவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் அவுஸ்திரேலியாவிற்கு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.