தொண்டு நிறுவன பெண் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொல்லப்பட்டார்

ஞாயிறு ஓகஸ்ட் 16, 2015

அமெரிக்காவை சேர்ந்தவர், தொண்டு நிறுவன பெண் ஊழியர் காய்லா மியூலர். இவரை 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வடக்கு சிரியாவில் அலெப்போ நகரில் உள்ள மருத்துவமனையில் வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக்கைதியாக பிடித்து சென்றனர். 

 

அவரை, ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கீர் அல் பாக்தாதி உத்தரவின்பேரில், அமெரிக்க தாக்குதலில் பலியான துனிசியா ஐ.எஸ். தீவிரவாதி ஒருவரின் வீட்டில் சிறை வைத்தனர். பின்னர் காய்லா மியூலரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று விட்டனர். அப்போது அவருக்கு வயது 26. 

 

அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, பல முறை அபு பக்கீர் அல் பாக்தாதியால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவலை காய்லா மியூலரின் பெற்றோரான கார்ல், மார்ஷா மியூலரிடம் அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். 

 

இந்த தகவலை மியூலர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் எமிலி லென்ஸ்னர் உறுதி செய்தார். அப்போது அவர், “எப்.பி.ஐ. மூலம் (அமெரிக்க உளவுத்துறை), காவலின்போது மியூலர் நடத்தப்பட்ட விதம் குறித்து, அவரது பெற்றோருக்கு தெரியவந்தது” என கூறினார். 

 

மியூலர், ஜோர்டான் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பலியானதாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் முதலில் கூறியது குறிப்பிடத்தக்கது.