"த நஷனல் டயலொக் குவார்டட்" க்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு- 2015

சனி டிசம்பர் 12, 2015

இவ்வாண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசினை துனீசியாவின் ஜனநாயக சார்பு குழு ஒன்று பெற்றுக் கொண்டது. நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற 2015ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கு நிகழ்விலேயே இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளின் வசந்தத்திற்காக தமது தாயகத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்ட பாடுபட்டதற்காக ‘த நஷனல் டயலொக் குவார்டட்’ எனும் அமைப்புக்கு குறித்த பரிசு கிடைத்தது.

துனீசிய பொதுத்தொழிலாளர் சங்கம், துனீசிய தொழில் கூட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் கைவினையாளர் சங்கம், துனீய மனித உரிமைகள் சங்கம் மற்றும் துனீசிய சட்டத்தரணிகள் இணைந்து இந்த அமைப்பினை கடந்த 2013 இல் உருவாக்கினர்.

வன்முறை மற்றும் போராட்டங்களால் பாதிக்கப்பட்ட துனீசியாவில் அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சிக்காகவே ‘குவார்டட்’ அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசு 9 லட்சத்து 72 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையது என்று குறிப்பிடப்படுகிறது.