பயத்தை விட சுதந்திரம் சக்தி வாய்ந்தது

செவ்வாய் டிசம்பர் 08, 2015

பயத்தை விட சுதந்திரம் சக்தி வாய்ந்தது என்றும் தீவிரவாதிகளுக்கு பயம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பில் அதிபர் ஒபாமா ஆழமான கவலையை வெளியிட்டுளார். நாட்டு மக்களுக்கான தனது வாராந்திர உரையில் இது தொடர்பில் அவர் பேசினார்.

உலக தீவிரவாதிகளால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாகவே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கலிஃபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில், படையினர் பயன்படுத்தும் வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது,

அமெரிக்காவில் ஆபத்தானவர்களின் கைகளில் துப்பாக்கிகள் கிடைப்பது மிகவும் சுலபமானது என்ற துக்ககரமான விஷயத்தை நினைவுபடுத்துவதாக, ஒபாமா தெரிவித்தார்.

கலிஃபோர்னியா துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை முதல் முறையாக, ஆசிரியர் தலையங்கத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.