பாங்கொங்கின் குண்டுவெடிப்பில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டும், 78 பேர் காயம்

திங்கள் ஓகஸ்ட் 17, 2015

தாய்லாந்து தலைநகர் பாங்கொங்கின் வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டும், 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

உள்ளூர் நேரப்படி இரவு 7.10 மணிக்கு எர்வான் வழிபாட்டிடத்துக்கு அருகிலேயே குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் குறைந்தது நான்கு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்படி வழிபாட்டிடத்துக்குள் இருந்து இரண்டாவது குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.