பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொலை வரலாறாக மாறியுள்ளது

சனி சனவரி 09, 2016

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டமை வரலாறாக மாறியுள்ளது என மஹாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஸ்ண காந்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிகழ்வில் பங்கேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரலாற்றில் இடம் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தமை தொடர்பில் அவர் இவ்வாறு வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத அமைப்பு ஒன்றின் தலைவரின் மகன் என்ற காரணத்திற்காக சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், உலகம் இதனை அனுமதிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்பாவி பொதுமக்கள் பழிவாங்கல்களின் அடிப்படையில் கொன்று குவிக்கப்படுவது மோசமான வரலாறாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.