பிரான்சில் தமிழினிக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது!

திங்கள் அக்டோபர் 19, 2015

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி (சிவசுப்ரமணியம் சிவகாமி) அவர்களுக்கு  பிரான்சு இவ்றி சூ சென் பகுதியில் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.

 

பிரான்சு தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 1986 ஆம் ஆண்டு முத்தையன்கட்டுப்பகுதியில் வீரச்சாவடைந்த மாவீரர் பப்பா - பிலிப்ஸ் அவர்களின் சகோதரிஈகைச்சுடரினை ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

 

அகவணக்கத்தைத் தொடர்ந்து நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையில், தமிழினி அவர்களின் ஆரம்பகால ஈடுபாடு பற்றியும் அவருடைய அரசியல் திறமைகள் பற்றியும் எமது தேசியப் போராட்டத்தில் அவர்கொண்ட பற்றுறுதி பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

 

தொடர்ந்து பொதுமக்கள் மாவீரர் தமிழினி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினர்.