பிரான்சுவாழ் மாவீரர் குடும்பத்தினருக்கு மாவீரர் பணிமனையின் அன்பான வேண்டுகோள்!

வெள்ளி அக்டோபர் 16, 2015

அன்பான பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர்களே: சகோதரர்களே!


எங்கள் தேசம் காத்து மண்விடுதலைக்காக தமது அளப்பரிய உன்னதமான உயிரை அர்ப்பணம் செய்த எம் மாவீரர்கள் காலம் காலமாக எமது இதயக்கோயிலில் வைத்துப் பூசிக்கப்படவேண்டியவர்கள்.


ஆண்டுதோறும் கார்த்திகை 27 ஆம் நாள் அவர்களுக்கு சுடர்ஏற்றி வீரவணக்கம் செலுத்தி ஒவ்வொரு தமிழனும் மனதில் உறுதி எடுத்துக்கொள்ளும் ஒரு புனித நாளில் எமது பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சில் வாழும் மாவீரர் பெற்றோர்கள், சகோதரர்கள் தமது சொந்தங்களின் திரு உருவப்படத்திற்கு கார்த்திகை 27 ஆம் நாளில் ஈகைச்சுடர் ஏற்றியும் பொதுமக்கள் அனைவரும் வீரவணக்கம்  செலுருத்தும் நிகழ்வினையும் நடாத்திவருகின்றது.


மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த இதுவரை மாவீரர்களின் நிழற்படங்களையும் விபரங்களையும் கையளிக்காதவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு எதிர்வரும் 20.11.2015 இற்கு முன்னதாகக் கிடைக்க வழிசெய்யுமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.