பிரித்தானியாவின் புதிய அகதிகள் சட்டம் ஈழத்தவர்களையும் பாதிக்கும்

செவ்வாய் ஓகஸ்ட் 04, 2015

பிரித்தானியாவில் புதிய அகதிகள் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்படுகின்ற விண்ணப்பதாரிகள் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி குடிவரவுத் திணைக்களத்தினால் தன்னிச்சையாக நாடுகடத்தப்பட முடியும்.


 
இது அகதி அந்தஸ்த்துக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ள ஈழ அகதிகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறான அகதிகள் மீண்டும் சிறிலங்காவுக்கு சென்றால் உயிராபத்து காணப்படுகின்ற நிலையில், அவர்கள் நாடுகடத்தப்படுவது ஆபத்தானதாகும். எனினும் புதிய சட்டத்தின் கீழ் நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்பதால், ஈழ அகதிகக்கு பெரும் சிக்கல் ஏற்படவுள்ளதாக கருதப்படுகிறது.


 
ஏற்கனவே அகதிகளை விரைவாக நாடுகடத்த குடிவரவுத் திணைக்களத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த “பாஸ்ட் ட்ரெக்” எனப்படும் விரைவு விசாரணையை முறையை லண்டன் உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதற்கு மாற்றீடாகவே இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.