புத்திசாலித்தனமாகவும் கரிசனையுடனும் கனடா உருவாக்கப்படும்

ஞாயிறு டிசம்பர் 06, 2015

புதிய லிபரல் அரசாங்கத்தின் கீழ் நாடு புத்திசாலித்தனமாகவும் கரிசனையுடனும் செயற்படும் என கனேடிய நாடாளுமன்றத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் உறுதிஅளிக்கப்பட்டுள்ளது.

மத்திய தர வர்க்கத்தினருக்கான வரிக் குறைப்பு மற்றும் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுதல் உள்ளிட்ட 42 ஆவது நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலை ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்சன் தயாரித்துள்ளார்.

பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவின் தலைமைத்துவத்தின் கீழ் பழங்குடியின மக்களுடனும் சிறந்த உறவுகள் பேணப்படும் என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

உரிமைக்கள் மற்றும் மதிப்பளித்தலை அடிப்படையாக கொண்டு இந்த உறவுகள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்ஒருபோதும் இல்லாத வகையில் புத்திசாதுரியமாகவும் கரிசனையுடனும் செயற்படுவதன் ஊடாக கனடா எதிர்காலத்தில் சிறந்த எதிர்காலத்தை கொண்டிருக்கும் என ஜோன்சன் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்நிலை நாடுகளின் சிறுவருக்கான கல்வியை மேம்படுத்துவதாக உறுதி அளித்துள்ள ஆளுநர், கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வெவ்வேறான அரசியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.