பொலிசாரை கண்டதும் ஓடியவர் கைது

வெள்ளி சனவரி 08, 2016

பொலிசார் வீதி ரோந்து நடவடிக்கையின் போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று (08/01/2016) வெள்ளிக்கிழமை அதிகாலை   2 மணியளவில்  சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 16 வயதுடைய 3 பேர் உட்பட  4 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களிமிருந்து 7 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 2 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.அதேவேளை பொலிசாரை கண்டு ஓடிய ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்து கைது செய்த போது அவர் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என பொலிசாரின் விசாரணயில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை  இன்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.