மகளிர் பொறுப்பாளர் தமிழினி அவர்கட்கு எமது வீர வணக்கம்

வியாழன் அக்டோபர் 22, 2015

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு மகளிர் பொறுப்பாளர் தமிழினி அவர்கட்கு எமது வீர வணக்கம் தமிழீழ அரசியல் துறை மகளிர் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் பிரிவு எமது மக்களையும், எம்மையும் ஆறாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். இவ்விழப்பில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தனது வேதனையையும், துயரத்தையும் அனைத்து தமிழ் உறவுகளுடனும் பகிர்ந்து கொள்கின்றது.

 


"பெண்கள் விழிப்புற்று, எழுச்சி கொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும், தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன்வரும் போதுதான், அந்த போராட்டம் ஒரு தேசியப் போராட்டமாக முழுவடிவத்தைப் பெறும்" என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தமிழினி அவர்கள் தனது பொறுப்பை மிகவும் ஆற்றல் திறன் வாய்ந்ததாகவும், வீரம், தீரம் படைத்த ஒரு பன்முகப் போராளியாகத் தன்னை வளர்த்துக்கொண்டார். அவருடைய ஆளுமை, பண்பைக் கண்டு கொண்ட தலைமை அவரை மகளிர் அமைப்புப் பொறுப்பாளராக நியமித்தது.

 

 

தமிழ்ப் பெண்களுக்கான வழிகாட்டியாகவும் அதே நேரத்தில் தேசிய தலைவரின்நேரடிவழிகாட்டலில் தனது விடுதலைக்கான பங்களிப்பை நல்கிய சிறந்த போராளி என்பதில்
இருவேறு கருத்திற்கு இடமில்லாதவர். அவரது பேச்சும் செயலும் என்றுமே பெண்களின் சமூக விடுதலை பற்றியதாகவும், தேச விடுதலை பற்றியதாகவும் இருந்தது. எமது பெண்கள் ஏன் தமிழ்ழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைய வேண்டிய நிலை தோன்றியது என்பதற்கு, அவர் பல்வேறு சந்தர்பங்களில் ஆற்றிய உரைகள், செவ்விகள் எமக்குச் சான ;று பகர்வதை அறியலாம். ஆம்! பெண் அடக்கு முறை, பழைமைவாதம், ஆணுக்கு சரி நிகர் பண்பு மற்றும் போராட்ட காலங்களிலும் இராணுவச் சுற்றி வளைப்பின் போதும் பெண்ணானவள் தன்னை எப்படி மாற்ற வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்துகொண்டவளாகவும், பெண்ணுக்கு சமூகத்தில் நல் மதிப்பைப் பெற்றுக் கொடுப்பவளாகவும் செயற்பட்டாள். அது மாத்திரமின்றித் தென் இலங்கைப் பெண்களுக்காகவும், உலகப் பெண்களுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுத்த மனிதநேயப்
போராளியாவார்.

 


2009 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்பு புனர் வாழ்வழிக்கப்பட்டபோதும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இருந்தபோதும் தனது மனத் திண்மையினால் சற்றும் மாறு படாதவராக அதேநேரம் மிக அமைதியாகவே வா ழ்ந்தார். இருந்தும் அவர் நோய்வாய்பட்டு சிகிச்சை பலனளிக்காது 18.10.2015ம் நாள் சாவைத் தழுவிக்கொண்டார். இவரது சாவிற்கு எமது வீர வணக்கத்தை தெரிவிப்பதோடு, அவரின் இழப்பில் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு எமது துயரினைப்பகிர்ந்து கொள்கிறோம். அதேவேளை இலட்சியக் கனவு வெல்லப்படும் வரை அனைத்து தமிழர்களும் தேசத்தை வென்றெடுக்க உறுதி கொள்வோம்.

 


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்சு