மலேசியா விமானத்தளத்தில் உரிமைகோரப்படாத 3 விமானங்கள்

புதன் டிசம்பர் 09, 2015

மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாட்டின் பெரிய விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற சொந்தம் கோரப்படாதுள்ள 3 விமானங்களின் உரிமையாளர்கள் அல்லது உரிமையாளரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடந்துவருகின்றது.

இந்த போயிங் 747 ரக விமானங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாவிட்டால், அவற்றை விற்றுவிடுவதற்கு அல்லது அழித்துவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது என்று கூறி அந்நாட்டின் தேசிய நாளிதழில் விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.

விமானங்களை தரையிறக்கியமை மற்றும் நிறுத்திவைத்திருக்கின்றமைக்காக கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டியுள்ளன. டிசம்பர் 21-ம் திகதிக்குள் கட்டணங்கள் செலுத்தப்படாவிட்டால், அந்த விமானங்கள் ஏலத்தில் விற்கப்படும் அல்லது பணத்தை அறிவிடுவதற்காக அவற்றின் பாகங்கள் மற்றும் உலோகங்களை அகற்றி எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.