மின்னப்போகும் செயற்கைக்கோள்

புதன் மார்ச் 02, 2016

இதுவரை உலகத்தில் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும், மிக பிரகாசமாக தெரியும் நட்சத்திரம் ”சிரியஸ்”. ஆனால் தற்போது அதை விட பிரகாசமாக காட்சியளிக்க கூடிய ஒரு செயற்கைகோளை 2016-ன் இடையில் விண்ணில் ஏவவுள்ளதாக கூறுகின்றனர் ரஷ்ய விஞ்ஞானிகள்.

இந்த செயற்கைகோளின் பெயர் ”மாயக்” , ஆங்கிலத்தில் ”பீக்கான்” என்று அழைக்கப்படும். இதை சூரிய கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு எதிரில் உள்ள சுற்றுப்பாதையில் பொருத்தி, சூரிய ஒளியை பிரதிபலிக்க செய்கின்றனர். இதனால் விண்ணில் உள்ள நட்சத்திரங்களை விட அதிக அளவு வெளிச்சத்தை தந்து மிக பிரகாசமாக இருக்கும். மேலும், இந்த செயற்கைகோள் நிலவை விட அதிக அளவு வெளிச்சத்தையும் தர இயலும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

’மாயக்’ ஆய்வு பயன்பாட்டிற்காக செலுத்தும் செயற்கைக்கோள் அல்ல. மனிதனின் ஆய்வுகளை ஊக்குவிக்கவும், விண்வெளி ஆராய்ச்சி என்பது எவ்வளவு ஆர்வமானது என்பதையும் உணர்த்த உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நட்சத்திரம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நான் சாப்பிடும் பிரட் அளவில் அனுப்பப்படும் மாயக், விண்வெளி சுற்றுப்பாதையை அடைந்தவுடன் 16 சதுர மீட்டர் அளவுள்ள, ஒளியை பிரதிபலிக்கும் பிரமிட் ஆக மாறிவிடும். இதனை உலகில் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்.

இந்த முயற்சி ஆராய்ச்சியாளர்களின் சோதனைகளில் வெற்றி பெற்று விண்ணில் ஏவ சில நாட்கள் அதிகமாக எடுத்துக்கொண்டாலும் இதன் வெற்றி ரஷியாவில் முதல் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைகோள் என்ற பெயரும் பெறும் என்பதில் பெருமிதம் கொள்கின்றனர் ரஷிய விஞ்ஞானிகள்.