முகநூலின் துணைத் தலைவர் கைது

புதன் மார்ச் 02, 2016

முகநூலின் துணைத் தலைவர்  டியாகோ சோடனை பிரேஸில் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் முகநூல் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவராவார். போதை பொருள் விற்பனை தொடர்பாக முகநூல் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பெற்று கொடுக்காமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவலை பாதுகாப்பு பிரிவிற்கு பெற்று கொடுக்க முடியாது என கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தெரிவித்துள்ளார். இக் கைதுக்கு முகநூல் நிறுவனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.