மூதூரில் 31 வருடங்களின் பின் மீள்குடியேற அனுமதி

வெள்ளி சனவரி 08, 2016

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலத்தடிச்சேனையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம்கள் அகற்றப்பட்டு அந்தப் பகுதியில் மீள்குடியேற மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 31 வருடங்களின் பின்னர் அப்பகுதியில் தமிழ் மக்கள் மீள்குடியேறுகின்றனர்.
 
1985ஆம் ஆண்டு போர் காரணமாக அப்பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி இலங்கை இராணுவத்தின் ஆட்லறித் தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 
 
தற்போது தமது சொந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு இந்த ஆட்சியில் கிடைப்பதாக மக்கள் மகிழச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அப்பகுதியை விட்டு வெளியேறும் இராணுவத்தினர் தமது ஆயுத தளபாடங்களையும் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.