மோடி – ஷெரீப் சந்திப்பு

வியாழன் டிசம்பர் 03, 2015

பாரிசில், பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசியதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த, சர்வதேச பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இம்மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் சிறிது நேரம் அவர் பேசினார்.இதை, ‘மரியாதை நிமித்தமான நடவடிக்கை’ என, இந்தியாவும், ‘இது, ஒரு நல்ல ஆரம்பம்’ என, பாகிஸ்தானும் கூறியுள்ளன.

இந்நிலையில், மோடி – ஷெரீப் சந்திப்பு குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது; இந்தியா – பாகிஸ்தான் இடையே, இதுபோன்ற நட்புறவு பரிமாற்றத்தை அமெரிக்கா எப்போதும் வரவேற்று வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கபூர்வமான நட்புறவு நிலவுவது, அந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, ஆசியாவின் ஸ்தீரத்தன்மைக்கும் நல்லதென டோனர் கூறினார்.