யார் மிகச்சிறந்த வீரர்?-ரிக்கி பாண்டிங் விளக்கம்

புதன் பெப்ரவரி 24, 2016

சச்சின் டெண்டுல்கரைப் பற்றிய Tendulkar in Wisden: An anthology என்கிற புதிய புத்தகத்தில் முன்னுரை எழுதியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:

சிறந்த வீரர் என்கிற வார்த்தையை அர்த்தமில்லாமல் விவாதம் செய்கிறார்கள். நீண்டநாள்களாக ஒருவர் சாதிக்கும்போதுதான் சிறந்த வீரராகிறார். சச்சின் 200 ஒருநாள் போட்டிகளிலும் 463 ஒருநாள் போட்டிகளிலும்  ஆடி 100 சதங்கள் எடுத்தவர். அதனால் தான் அவர் சிறந்த வீரராகிறார். இளம் வீரர்கள் அதிகப்பட்சமாக 12 அல்லது 18 மாதங்களுக்கு நெ.1 வீரராக இருக்கலாம். அதனால் சிறந்த வீரராகிவிட முடியாது. அது ஒரு சிறப்பான வருடம் என்றுதான் அர்த்தமாகும். சச்சினைப் போல நீண்ட வருடம் தாக்குப் பிடித்து சாதித்துக் காண்பித்தால் தான் சிறந்த வீரராக முடியும்.

சச்சினைப் போல வேறு யாரும் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதோ 100 சதங்களோ அடிப்பது சாத்தியமில்லை. பிராட்மேனுக்குப் பிறகு சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின்தான் என்று கூறியுள்ளார்.