லண்டன், வாஷிங்டன், பாரீஸை தாக்குங்கள்-ஒசாமா மகன்!

ஞாயிறு ஓகஸ்ட் 16, 2015

வாஷிங்டன், லண்டன், பாரீஸ், டெல் அவிவ் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்துமாறு அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் உத்தரவிட்டுள்ளார்.

அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத்தில் இருக்கும் வீட்டில் வைத்து அமெரிக்க படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அந்த அமைப்பின் அடுத்த சக்திவாய்ந்த தலைவராக அவரின் மகன் ஹம்ஸா பின் லேடன் வருவார் என்று தீவிரவாதிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் ஹம்சா பின் லேடன் தீவிரவாதிகளுக்கு ஆடியோ மூலம் பிறப்பித்துள்ள உத்தரவு அல் கொய்தா அமைப்பின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதை தீவிரவாதிகள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

காபூல், பாக்தாத் மற்றும் காசாவில் உள்ள அல் கொய்தா உறுப்பினர்கள் வாஷிங்டன், லண்டன், பாரீஸ் மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்கள் மீது புனிதப் போர் நடத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
20களில் இருக்கும் ஹம்சா அல் கொய்தா அமைப்பை பழையபடி சக்திவாய்ந்ததாக ஆக்குவார் என்று தீவிரவாதிகள் கருதுகிறார்கள்.