வசீம் அக்ரம் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

புதன் ஓகஸ்ட் 05, 2015

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

அந்நாட்டு தேசிய மைதானத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பக்கிச் சூடு நடத்தியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

 

மேலும் அவர் இதன்போது காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.