வீரப்புதல்வி தமிழினி அவர்களின் வணக்கநிகழ்வில் கல்லறைக்கு தேசியக்கொடி போர்த்தி வீரவணக்கம்

புதன் அக்டோபர் 21, 2015

வீரப்புதல்வி தமிழினி  அவர்களின் வணக்கநிகழ்வில்  கல்லறைக்கு தேசியக்கொடி போர்த்தி வீரவணக்கம் செலுத்திய யேர்மன் வாழ்  தமிழீழ  மக்கள்

 

தமிழீழ மண்ணுக்காக தன் இறுதி மூச்சு வரை உழைத்த போர்மகள் தமிழினி அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மன் தலைநகரத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது . இரண்டு நாட்களுக்குள் ஒழுங்குசெய்யப்பட்ட இவ் வணக்க நிகழ்வில் பேர்லின் வாழ் தமிழ் மக்கள் மிக உணர்வோடு கலந்துகொண்டனர் .

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பால் உயிர்நீத்த தமிழீழ மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளராக திகழ்ந்த தமிழினி (ஜெயக்குமரன் சிவகாமி) அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள்  கல்லறைக்கு தேசியக்கொடி போர்த்தி மலர் தூவி சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர் .

தொடர்ந்து பன்முக ஆளுமை மிக்க வீரப்புதல்வி தமிழினி அவர்கள் தமிழீழ மக்களுக்கும் , விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய அர்ப்பணிப்பை எடுத்துரைக்கப்பட்டு  ,நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கண்ணீர் விட்டு போர்மகளின் நினைவுகளை மீட்டி பகிர்ந்து கொண்டனர் .

இறுதியாக தமிழினி அவர்களின்  கனவு நனவாக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயற்பட வேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் முழக்கத்துடன் வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது .