12வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

ஞாயிறு செப்டம்பர் 08, 2019

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய நீதிக்கான நடைபயணம் 12 ஆவது நாளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்மாகி வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.

நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக காலைநிலை மாற்றத்தால் மழையை எதிர்கொள்ள நேரிட்டபோதும் கடுமையான இடருக்கு மத்தியில் நடைபயணம் எதிர்பார்த்த இலக்கை நோக்கி சென்றது.

111

நேற்றைய 07/09/2019 நாளில் பாரிசிலிருந்து சென்ற விடுதலை உணர்வாளர்கள் நண்பகல் முதல் நடைபயணத்தில்  இணைந்தனர்.

தமிழர் விளையாட்டுக்கழகம் 93, ஈழவர் விளையாட்டுக்கழகம், யாழ்டன் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை நடைபயணம் முடியும் வரை பயணித்தனர்.