13 பிரான்ஸ் இராணுவத்தினர் பலி!

செவ்வாய் நவம்பர் 26, 2019

மாலியில் இடம்பெற்ற தாக்குதலின் போது இரண்டு உலங்கு வானூர்தி ஒன்றுடனொன்று மோதியதில் 13 பிரான்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாலியில் ஜிஹாத் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் நாட்டு இராணுவத்தினரே இவ்வாறு நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மாலியில் 4500 பிரான்ஸ் இராணுவ வீரர்கள் இவ்வாறு ஜிஹாத் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.