2019 அப்பிள் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் புதிய சாதனங்கள்!

செவ்வாய் ஓகஸ்ட் 27, 2019

அப்பிள் நிறுவனத்தின் 2019 செப்டம்பர் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய சாதனங்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

 

அப்பிள் நிறுவன சாதனங்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இன்னும் சில நாட்களில் அப்பிள் நிறுவனம் தனது 2019 ஐபோன் மாடல்களுடன் புதிய அப்பிள் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், 2019 செப்டம்பர் நிகழ்வில் அப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் சாதனங்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
 

ஐபோன் - கோப்புப்படம்

ஐபோன் 

ஆப்பிள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மூன்று ஐபோன்களை வெளியீடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதே வழக்கத்தை பின்பற்றி இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யலாம். இவை கடந்த ஆண்டு வெளியான ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களாக இருக்கும் என தெரிகிறது. புதிய ஐபோன்களில் அதிகபட்சம் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஐபேட் ப்ரோ - கோப்புப்படம்

 

ஐபேட் ப்ரோ மாடல் புதிதாக ஏ13 பிராசஸர்களுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிராசஸர் தவிர ஐபேட் மாடல்களில் மேம்பட்ட கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் 10.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லோ-எண்ட் ஐபேட் ஒன்றையும் அறிமுகம் செய்யலாம்.
 

மேக்புக் ப்ரோ - கோப்புப்படம்


இந்த ஆண்டு செப்டம்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யலாம். இதில் 16-இன்ச் ஸ்கிரீன் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று ஆப்பிள் இதர மாடல்களையும் அப்டேட் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன், ஐபேட் வாட்ச் வரிசையில் ஆப்பிள் நிறுவனம் புதிதா வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யும் என தெரிகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் மாடலில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதனை ஜப்பான் டிஸ்ப்ளே இன்க் நிறுவனம் வினியோகம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.