2வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

வியாழன் ஓகஸ்ட் 29, 2019

பிரான்சிலிருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் சூஸ்ரூவா நகரசபைக்கு முன்பாகத் தொடங்கி மதியம் இவ்விரிகுக்குவான் நகரசபை நோக்கிச் சென்றனர். அங்கிருந்து மொளோன் நகரை இன்று மாலை சென்றடையவுள்ளது.

இவ்நடைபயணம் எதிர்வரும் மாதம் 16 ஆம் நாள் ஜெனீவா முருகதாசன் திடலை சென்றடையவுள்ளது. இதேநாள் தாயகத்திலும் எழுக தமிழ் பேரணி நிழகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.