3 வழக்குகளின் விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்

செவ்வாய் ஜூன் 25, 2019

இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையின் தொழிற்சங்க தலைவர்கள் மூவரிடம் 1,500 மில்லியன் ரூபா நட்டஈடு பெற்றுக்கொடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவினால் தொடரப்பட்டுள்ள 3 வழக்குகளின் விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கொழும்பு பிரதம நீதவான் அமாலி ரணவீர (24ஆம் திகதி) அறிவித்துள்ளார்.

தாம் தொடர்பில் ஊடக சந்திப்பொன்றில் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்து அர்ஜூன ரணதுங்க வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபைக்கு சொந்தமான தளபாட கைத்தொழில்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உபகரணங்களை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி தமது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கிணங்க உதேனி ஜயரத்ன, சுமித்ரலால் பிரசன்ன மற்றும் வங்கமுகே லால் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.