5ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகமானது விரைவில் சீர் செய்யப்படும்!!

ஞாயிறு மே 17, 2020

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக சுமார் 5,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சகம் குறிப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹம்பாந்தோட்டை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இவ்வாறு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

நாட்டில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக நேற்றும் நேற்று முன்தினமும் சுமார் 45,000 வீடுகளுக்கான மின்சாரமும் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.எவ்வாறெனினும் தற்போது மின் தடைப்பட்டுள்ள 5,000 வீடுகளுக்கான மின்சார விநியோகமானது விரைவில் சீர் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.