7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

செவ்வாய் ஜூலை 09, 2019

சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எங்களுடைய பணியை சிறப்பாக செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.திமுக ஆட்சி காலத்தில் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம் . எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.  

7 பேர் விடுதலை விவகாரத்தில் எங்கள் வேலையை சரியாக செய்தோம்,இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவரை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது.உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எங்களுடைய பணியை சிறப்பாக செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம் என்று கூறினார்.