8வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

புதன் செப்டம்பர் 04, 2019

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கிய நடைபயணம் இன்று 8 ஆவது நாளாக துறோவா மாநிலத்தில் மாநகரசபையின் முன்பாக தமிழினப்படுகொலையின் சாட்சியங்கள் கொண்ட நிழற்படக்கண்காட்சி நாடத்தப்படுகின்றது.

துறோவா வாழ் தமிழ் உணர்வாளர்களுடன் மாநகரசபை முன்பாக காலை 10.30மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

111

ஆரம்பித்தவுடனேயே பல பிரெஞ்சு மக்களும்,வெளிநாட்டு மக்களும் வந்து படங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.