9 பேருக்கு பி.சீ.ஆர் சோதனை

சனி மே 23, 2020

நுரைச்சோலை- லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் 9 பேர், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் திடீர் சுகவீனமடைந்த நிலையில், அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள்   பெறப்பட்டுள்ளன. 

புத்தளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  மாதிரிகள் பெறப்பட்டதன் பின்னர், மீண்டும் மின் உற்பத்தி நிலைய தங்குமிட விடுதியில் அவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இங்கு பணியாற்றும் 600 பேருக்கு வீடுகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்படுகிறது.