அக்கினிப் பறவைகள் – இதழ் 1

செவ்வாய் செப்டம்பர் 03, 2019

அக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவாகிய நாம், கடந்த ஆண்டுகளில் பல ஊடக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆவணப்படுத்தல், ஆய்வுக்கட்டுரைகள், அரசியற் காணொளிகள் போன்ற பல முயற்சிகளில் அடித்தளத்தினை அமைத்துவரும் நாம், ”அக்கினிப் பறவைகள்” எனப் பெயர் சூட்டப்பட்ட ஆங்கிலத்திலும் தமிழிலும் மாதாந்தம் வெளிவரவிருக்கும் செய்தித்தாழின் முதலாவது இதழினை உங்கள் கைகளில் தருவதை ஒட்டிப் பெருமிதமடைகின்றோம்.

இப்புதுமுயற்சியில் காலடியெடுத்துவைக்கும்வேளையில் தமிழிறைமையினை என்றென்றும் விட்டுக்கொடுக்காது நிலைநாட்டுவதற்காக உழைக்கும் எம்முடன் இணைந்து பயணிக்குமாறு பணிவன்புடன் வேண்டி நிற்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
வெல்வது உறுதி

இங்ஙனம்,
அக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவு, புரட்சி Media
செயற்குழுவினர்.

1

2