அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு

ஞாயிறு மே 17, 2020

 பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு மீது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றுடன் அறிவித்து முடித்தார்.

இந்நிலையில் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?. மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு’’ என பதிவிட்டுள்ளார்.