அதிக நேரம் கையடக்க தொலைபேசி பாவித்தால் தலையில் கட்டி

ஞாயிறு ஜூன் 23, 2019

கையடக்க தொலைபேசியை (மொபைல்போன்) அதிகநேரம் பயன்படுத்தினால் தலையில் கட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சிச் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மொபைல்போன் பயன்பாடு மனித வாழ்க்கையில் அத்தியாவசியமான தொன்றாகமாறிவிட்டது. தொடர்பு கொள்ள, புகைப்படம் எடுக்க, இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் பார்க்கமட்டுமல்லாமல் தொழில் ரீதியாகவும் மொபைல்போன் பயன்படுகிறது.

இத்தனையும் தாண்டி மொபைல் கேம்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அடிமையாகி உள்ளனர். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் மொபைல் போனிலேயே கழிக்கின்றனர். ஆதலால், பெரும்பாலான நேரங்களில் கழுத்தை மட்டுமல்லாமல் உடம்பையும் குனிந்து கொண்டே மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு மொபைல் போனை அதிகமாக குனிந்தபடியே பயன்படுத்தும் போது தலையின் மொத்த எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்வதாக கூறப்படுகிறது. இதனால், தசைநார்கள் வளர்ந்து தலையின் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்கிறதென பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆதலால், சிறிது நேரம் மட்டுமே மொபைல் போனை பயன்படுத்துமாறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.