அவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேல் ஒன்றுகூட தடை

திங்கள் மார்ச் 30, 2020

அவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கு இன்றிரவு (30) முதல் அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கனவே 10 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

உலகளவில் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை சமூக இடைவௌியை பேணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் 7,20,000 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 34,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.