செய்திகளும் எழும் கேள்விகளும்

ஞாயிறு ஜூலை 28, 2019

செய்தி:- தமிழ் மக்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோர
வில்லை. சமாதானம், ஒருமித்த நாட்டையே கேட்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் தெரிவித்துள்ளார்.?

எழும் கேள்வி:- சிங்கள ஏக்கிய இராச்சியத்தைத்தான் கோருகின்
றார்கள் என்று சம்பந்தன் சொன்னாலும் சொல்லிவிடுவாரோ..?
                                               *********
செய்தி:- இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரருமாகிய சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- சம்பந்தன், சுமந்திரன் காதில் ‘இனப்படுகொலை’ என்ற சொல் விழுந்தால் உங்களைக் கட்சியை விட்டுத் தூக்கிவிடுவார்கள் என்ற பயம் இல்லையோ..?
                                            *********
செய்தி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் சம்மந்தனோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைத்தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோல் தேர்தல் வரும் பின்னே, கூட்டணிக்கு அழைப்பு வரும் முன்னே என்று இதனைச் சொல்லலாமா..?
                                         *********
செய்தி:- குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், தீவிரவாத அமைப்பினை ஒரு மாததிற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால் ஏன் வடபகுதியில் ஒரு பகுதிக்குள் இயங்குகின்ற 15-20 இளைஞர்களைக் கொண்ட இந்தக் வாள் வெட்டுக் கும்பலை அடக்க முடியாது என ஈரோஸ் கட்சியின் தலைவர் இ.பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.

எழும் கேள்வி:- இப்படியயல்லாம் சிந்திக்கக்கூடாதென்பது இவருக்குத் தெரியாதோ..?
                                       *********
செய்தி:- எதிர்வரும் பொது தேர்தலுடன் தேர்தல்களின் பங்குபற்றுவதிலிருந்து விடைப்பெற தீர்மானித்துள்ளதாகவும் இறுதி ஐந்து வருடங்கள் மக்களை முன்னேற்றுவதற்கான பணிகளை செய்ப்போவதாக சிறீலங்கா அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- அடுத்த தேர்தலில் வெல்வதற்கான நாகாஸ்திரத்தை மங்கள சமரவீர கையில் எடுத்தவிட்டாரோ..?
                                     *********
செய்தி:- இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- இஸ்ரேலில் பலஸ்தீனர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கவில்லையா..?
                                    *********
செய்தி:- அரசை கவிழ்த்துவிட்டு என்ன செய்யப் போகின்றோம் என சிறீலங்கா நாடாளுமன்றத்தில் சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

எழும் கேள்வி:- வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள்...?
                                   *********
செய்தி:- என்னால் வரலாற்றை எழுத முடியும் என்று தமிழ் அரசுக்
கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா குறிப்பிட்டார்.

எழும் கேள்வி:- சிங்கள அரசுக்கு எப்படி சாமரம் வீசுவதென்ற வரலாற்றையோ..?

நன்றி: ஈழமுரசு