சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை!

வெள்ளி மே 15, 2020

'கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்' என, அமெரிக்க அதிபர், டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், 'வைரஸ் பரவல் குறித்து, 60 நாட்களுக்குள் முழு தகவலை அளிக்காவிட்டால், சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என, செனட் சபையில், சில, எம்.பி.,க்கள் தீர்மானம் கொண்டு வந்து உள்ளனர்.

பிரதிநிதிகள் சபையிலும், இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 'வைரஸ் பரவல் தொடரும் நிலையில், ஊரடங்கை தளர்த்துவது ஆபத்தானது' என, நாட்டின் பிரபல தொற்றுநோய் மருத்துவ நிபுணர், ஆன்டனி பாசி கூறி வருகிறார். ஆனால் அதை, அதிபர் டிரம்ப் புறந்தள்ளி வருகிறார்.